ECONOMYHEALTHSELANGOR

மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வு ஞாயிறன்று பந்தாய் மோரிப்பில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 22- பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்” திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கோல லங்காட், பந்தாய் மோரிப்பில் நடைபெறும்.

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அம்பாங் தாமான் கோசாசில் கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்நிகழ்வு வரும் ஜூலை 2 ஆம் தேதி கோல சிலாங்கூர் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளது.

வரும் ஜூலை 26 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவாட் சதுக்கத்திலும் 31 ஆம் தேதி பத்து கேவ்ஸ் பொது திடலிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலைஞர்களின் இசைப் படைப்புகள், ஏரோபிக் நிகழ்வு, சமையல் போட்டி, மக்கள் விளையாட்டு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

அதிகமான மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக 35 கோடி வெள்ளி நிதியில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.

சுமார் 25,000 பேர் பயன் பெற்று வந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு அன்னையர் திட்டத்திற்கு பதிலாக 30,000 பேர் பயன்பெறக்கூடிய பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.


Pengarang :