ECONOMYHEALTHSELANGOR

அவிஷேனா சிறுநீரக பராமரிப்பு மையத்தை சிலாங்கூர் அரசியார் நோராஷிகின் திறந்து வைத்தார்

ஷா ஆலம், ஜூன் 22– அவிஷேனா சிறுநீரக பராமரிப்பு மையத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நேராஷிகின் இன்று இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரியை அவிஷேனா மருத்துவ மையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமது யூசுப் மற்றும் அவிஷேனா ரெனால் கேர் சிறுநீரகவியல் பிரிவின் ஆலோசகர் டாக்டர் ரஷிட் சைடின் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னதாக, அவிஷேனா நிபுணத்துவ மருத்துவமனையில் உள்ள அவிஷேனா ஷா ஆலம் டயாசிலிசிஸ் மையத்திற்கு வருகை புரிந்த அரசியார் சுமார் 30 நிமிடங்களை  செலவிட்டு  அம்மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அவர், அவிஷேனா ரெனால் கேர் ஏற்பாட்டில் 17 மற்றும் 70 வயதுடைய இரு சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தலா 10,000 வெள்ளி உதவித் தொகைக்கான மாதிரி காசோலைகளை ஒப்படைத்தார்.

அவிஷேனா ரெனால் கேர் அமைப்பின் கீழ் ஷா ஆலம், செத்தியா ஆலம் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கன் ஆகிய இடங்களில் மூன்று டயாலிசிஸ் மையங்கள் உள்ளன.


Pengarang :