ECONOMYSELANGOR

2,299 தொழில் முனைவோர் வணிக வளர்ச்சியில் உதவினர்

ஷா ஆலம், ஜூன் 24: மாநிலத்தில் ஐ-பிஸ்னஸ் நிதியளிப்புத் திட்டத்தின் மூலம் மொத்தம் 2,299 தொழில் முனைவோர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த உதவி  பெற்றுள்ளனர்  என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இந்த அனைத்து தொழில்முனைவோர்கள் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் RM965,000 நிதியில் உதவி பெற்றதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் மூலம் RM50,000 வரை கூடுதல் மூலதன நிதியை வழங்குவதன் மூலம் தனி நபர்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த மாநில அரசு உதவுகிறது.

“இந்த நிதியுதவி திட்டத்திற்கு ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 2,299 தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளனர்” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் மூலம், ஹிஜ்ரா சிலாங்கூர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோருக்கு RM50,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் நிதியுதவி அனைத்து வணிகத் துறைகளுக்கும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு ஆர்வமுள்ளவர்கள் www.hijrahselangor.com ஐப் பார்வையிடலாம்.

http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


Pengarang :