ECONOMYNATIONAL

எதிர்க்கட்சிக் கூட்டணியின் மிரட்டலுக்கு அரசாங்கம் அடிபணிந்தது,  கோழிக்கான புதிய விலையை அறிவிக்காத அரசு, கட்டண உயர்வு திட்டத்தை ரத்து செய்தது

ஷா ஆலம், ஜூன் 25: தீபகற்பத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண விகிதங்களை RM580 கோடி மானியச் செலவில் ஈடுகட்ட அரசாங்கம் இன்று முடிவு செய்துள்ளது.

இது, இவ்வாண்டு ஜூலை முதல் அரசாங்கம் வழங்கி வந்த எல்லா உதவித் தொகையையும் மீட்டுக்கொள்ளும் என அறிவித்ததை அடுத்து நாட்டு மக்கள் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி கூட்டணி பார்த்துக் கொண்டிருக்காது என்ற  அறிவிப்புக்கு பின் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், அனைத்து உள்நாட்டு நுகர்வோருக்கும் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு இரண்டு சென் (kWh) என்ற தள்ளுபடி பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“அதற்காக தீபகற்பத்தில் உள்ள உள்நாட்டு நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. “3.70 சென்/கிலோவாட் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது உள்நாட்டு அல்லாத நுகர்வோருக்கு, அதாவது வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு பராமரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சந்தையில் கோழியின் விலை அறிவிக்கப்படவில்லை என்றும், புதிய உச்சவரம்பு விலையை வேளாண்துறை அமைச்சர் பின்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இஸ்மாயில் சப்ரி கூறுகையில், கோழி சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் கோழி பண்ணையாளர்களுக்கு ஜூலை 1 முதல் அரசு மானியம் வழங்காது   அதுமட்டுமின்றி, கோழி மற்றும் கோழி முட்டைகளுக்கான உச்சவரம்பு விலைக் கட்டுப்பாடு, பாட்டில்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு மானியம் இரண்டு முதல் ஐந்து கிலோ வரை ஜூலை 1 நிறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.


Pengarang :