ECONOMY

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கி சூடு வீடியோ புக்கிட் திங்கியில் நடந்தது  இல்லை – போலீஸ்

ஷா ஆலம், ஜூன் 25 – சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ, துப்பாக்கிச் சூடு சம்பவம், கிள்ளான், புக்கிட் திங்கி பகுதியில் நடந்ததாகக் கூறப்படுவதை, தெற்கு கிள்ளான் போலீசார் மறுத்துள்ளனர்.

தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் கூறுகையில், இந்த வீடியோ உண்மையில் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டில் நடந்துள்ளது என்றார்

“சந்தேகத்திற்குரிய ஒருவருக்கும் பாதுகாவலருக்கும் இடையே ஒரு வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோ புக்கிட் திங்கி பகுதியில் நடைபெறவில்லை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

பொதுமக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரிபார்க்கப் படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களை எச்சரித்து உள்ளது என்றார்.


Pengarang :