ECONOMYNATIONAL

முன்னாள் ஆயுதப் படை வீரர்களுக்கு  மாதம் 300 ரிங்கிட் ஓய்வூதியமா?

கோத்தா பாரு, ஜூன் 25: ஓய்வூதியம் பெறாத மலேசியாவின் ஆயுதப் படை வீரர்கள் (PVTTBM) சங்கத்தின் கீழ் பதிவு செய்துள்ள நாடு முழுவதும் உள்ள 71,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்களது மாதாந்திர வாழ்க்கை படியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

PVTTBM துணைத் தலைவர் முகமது ராணி ஹுசின் கூறுகையில், சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்கு சுமார் RM300 மட்டுமே பெறுகின்றனர், இது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மதிப்பற்ற தாகக் கூறப்படுகிறது.

சங்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் ஏழைகள் மற்றும் தேவையுடையவர்கள் என வகைப்படுத்த பட்டுள்ளதால், அரசாங்கம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் RM200 உதவித்தொகையை உயர்த்தும் என PVTTBM நம்புவதாக அவர் கூறினார்.

“சராசரியாக சுமார் 40 வயது மற்றும் சிலர் 80 வயதுக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களைப் பார்க்க நாங்கள் அடிக்கடி களத்தில் இறங்குகிறோகுகிறோம். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சொந்த நிலம் மற்றும் வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

“அது தவிர, நிலம் மற்றும் சொந்த வீடு இல்லாத படை வீரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய வீடுகளை நன்கொடையாக வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று  PVTTBM பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிங்காட் ஜாசா மலேசியா (பிஜேஎம்) பெறுபவர்கள் நாட்டிற்கான அவர்களின் சேவைகளைப் பாராட்டுவதற்கு அரசாங்கம் சிறப்பு கொடுப்பாணயைபாணயை வழங்கும் என்றும் சங்கம் நம்புவதாக முகமது ராணி கூறினார்.

“இதுவரை, 200,000 க்கும் மேற்பட்ட பெறுநர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் சிலர் காயம் அடைந்துள்ளனர், இதில் கால்கள் உடைந்தவர்கள் மற்றும் பலர் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.


Pengarang :