ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இந்திய சமுதாய மேம்பாட்டு  வடிவமைப்பு

கிள்ளான், செந்தோசா ஜூன் 26;- இன்று பிற்பகல் 1..00 மணிக்கு, கிள்ளான், செந்தோசா சட்டமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல் என்ற கருத்தரங்கம் எதிர்வரும் ஜூலை 3ந்தேதி கிள்ளான் எக்மார் வேண்டம் அரங்கில் நடைபெற உள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ  தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கிள்ளான் நகராட்சி மன்ற உறுப்பினர்களும், பத்திரிக்கையாளர்களும்  கலந்து கொண்டனர்.

இதில் கெஅடிலான் தேசிய தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியுடன் மாநில சட்டமன்ற மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்க்கப் படுகிறது. இதில் முன்கூட்டியே தங்களை பதிந்து கொண்ட பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

இந்த கருத்தரங்கின் அவசியம் குறித்து கருத்துரைத்த மாண்புமிகு சார்லஸ்  எந்த திட்டமானலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதனை ஆய்வு செய்ய வேண்டும். இந்தியர் புளூபிரிண்ட் 2017 இல் தொடங்கப்பட்டது. பக்காத்தான் இந்தியர் மேனிபெஸ்டோ 2018ல் சமர்ப்பிக்கப்பட்டது. இவைகள் மூலம்  இந்திய  சமுதாயம்  அதன் இலக்கை அடைந்ததா?

இலக்கை  அடைய  அதற்கு மேலும் என்ன தேவை என்பது போன்ற கூறுகளை  ஆய்வு செய்வதற்கு  இது போன்ற கருத்தரங்கம் அவசியம் என்றார். சமுதாயம் அதன் இலக்கை அடைய  வேறு என்ன தேவை என்பது குறித்து  தொழில் துறை வல்லுநர்களின்  கருத்து என்ன?

அப்படிப்பட்டவர்களின்  கருத்தை பெறும் வண்ணம்  டிஎம் எனலிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முகமாட் அப்துல் காலிட் மற்றும் எலைன்ஸ் வங்கியின்  முன்னாள் பொருளாதார வல்லுநர் மனோகரன் மொட்டையன்  ஆகியோரும் அவர்களின் கருத்துகளை  அளிக்க  இக்கருத்தரங்குக்கு வருகின்றனர் என்றார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.

அதனை சிலாங்கூரில்  முன்னெடுப்பது  குறித்து  மாநில மந்திரி புசார்  மற்றும்  நாடாளுமன்ற  எதிர்கட்சி தலைவரின்  ஆலோசனை மற்றும் அங்கீகாரத்தை  பெற  இந்த கருத்தரங்கம்  நோக்கம்  கொண்டுள்ளதாக  அவர்

 


Pengarang :