ECONOMY

இ.சி.ஆர்.எல். கட்டுமானம்- கே.எல்.-காராக் நெடுஞ்சாலை இன்றிரவு தற்காலிகமாக மூடப்படும்

குவாந்தான், ஜூன் 27– கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் (இ.சி.ஆர்.எல்.) திட்டப் பணிகளுக்காக கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 55.35 முதல் 55.85வது கிலோ மீட்டர் வரையிலானப் பகுதி இன்றிரவு 11.00 மணி தொடங்கி 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்.

அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக அந்த நெடுஞ்சாலையின் இரு வழிகளும் போக்குவரத்துக்கு மூடப்படுவதாக ஏ.என்.எச். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரெட்ஜிமா முகமது ராட்ஸி கூறினார்.

இரவு 11.30 மணியளவில் அந்த நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் உள்ள இடது பக்க தடங்கள் மட்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்றும் நாளை 28 ஆம் தேதி அதிகாலை 5.00 மணியளவில் அந்த நெடுஞ்சாலை முழுமையாக திறந்து விடப்படும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கெந்திங் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனரக இயந்திரங்களின் போக்குவரத்துக்காக அந்த நெடுஞ்சாலை மூடப்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.

வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் அதேவேளையில் நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் தங்கள் ஊழியர்களின் உத்தரவைப் பின்பற்றி நடக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :