ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரிப்பு- மரண எண்ணிக்கை சரிவு 

கோலாலம்பூர், ஜூன் 27- இம்மாதம் 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான 25வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 10.9 விழுக்காடு அதிகரித்து 15,739 சம்பவங்களாகப் பதிவானது. கடந்த 24வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 14,195 ஆக இருந்தது.

எனினும், 24வது வாரத்தில் 21ஆக இருந்த இந்நோயினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த வாரம் 38.1 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 13 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 25வது நோய்த் தொற்று வாரத்தில் 33.8 விழுக்காடு உயர்வு கண்டு 14.078 ஆக பதிவானதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனைகள் மற்றும் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வாரத்தில் 11 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதே சமயம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் இந்நோயாளிகளின் எண்ணிக்கையும் 28 விழுக்காடு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :