ECONOMYHEALTHSELANGOR

ஜூலை 2 அன்று கோலா சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவில் ஜெலாஜா சிலாங்கூர் என்னும்  மக்களுக்கு புதிய உதவி திட்டம்

ஷா ஆலம், 27 ஜூன்: மக்களுக்கு பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை அறிமுகப்படுத்தும் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம், இந்த சனிக்கிழமை கோலா சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவில் நடைபெறும்.

காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியை சுமார் 11 மணிக்கு டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷா கலந்துக் கொள்வார்.

இந்நிகழ்வில் வாணி ஹஸ்ரிதா, ஏரோபிக்ஸ், மக்கள் விளையாட்டுப் போட்டிகள், இ-ஸ்போர்ட்ஸ், இரத்த தானம், கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

சிலாங்கூர் வறுமை ஒழிப்பு திட்ட உதவி, சிலாங்கூர் சிறு தொழில் முனைவோர் நிதி உதவி மற்றும் புஸ்பனிதா திட்டம் மற்றும் சுகாதார மன்றம் ஆகியவற்றின் அடையாள ஒப்படைப்பும் நடைபெறும்.

அதிகமான மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக 35 கோடி வெள்ளி நிதியில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.

சுமார் 25,000 பேர் பயன் பெற்று வந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு அன்னையர் திட்டத்திற்கு பதிலாக 30,000 பேர் பயன்பெறக்கூடிய பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இது தவிர, கடும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐயாயிரம் பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் கலந்து சிறப்பிப்பதுடன் , மருத்துவ சோதனை போன்ற உடல் நல  த் திட்டங்களில் தவறாது கலந்து , உடல் நிலை பற்றி அறிந்துகொள்ளவும்  மக்கள் அழைக்கப் படுகிறார்கள்.


Pengarang :