ECONOMYSELANGOR

“செர்வ்” தன்னார்வலர் அமைப்பில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 29-  பேரிடர் சமயங்களில் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்ட  “செர்வ்” எனப்படும் தன்னார்வலர் மீட்பு அமைப்பில் இணைந்து சேவையாற்ற இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

பேரிடர் நிகழும் சமயங்களில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த தன்னார்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) கூறியது.

இந்த தன்னார்வலர் குழுவில் இணைந்து பணியாற்றுவோருக்கு  செலவுப்படி, காப்புறுதி பாதுகாப்பு,  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பயிற்சி ஆகிய அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி மற்றும் பயிற்சிக்கான வசதிகளை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வழங்குவதாக எம்.எஸ்.என். அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த தன்னார்வலர் அமைப்பில் இணைய விரும்புவோர் 18 முதல் 45 வயது வரையிலானவர்களாகவும் உடல் குறைபாடு இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும் சமூகப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம்.

ஆர்வமுள்ளவர்கள் படத்தில் காணப்படும் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து மேல் விபரங்களைப் பெறலாம்.

முன்பு செர்வ் இலிட் என அழைக்கப்பட்ட இந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு மாநில அரசு 100,000 வெள்ளியை ஒதுக்கீடு.


Pengarang :