ECONOMYSELANGOR

ஷா ஆலம் சாலையின் பெயர் மாற்றம் – சுல்தான் ஆணையை ஏற்றது மாநகர் மன்றம்

ஷா ஆலம், ஜூன் 29-  ஷா ஆலம், செக்சன் 1 இல் உள்ள பெர்சியாரான்  இன்ஸ்டடியுட் சாலையின் பெயரை மாற்றுவதற்கு  சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வெளியிட்ட அரசாணையை ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்றுக் கொண்டது.

தற்போது யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா என அழைக்கப்படும் முன்னாள் மாரா டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டின் (யு.ஜ.டி.எம்.)முதலாவது இயக்குனரை கெளரவிப்பதற்காக  பெர்சியரான் இன்ஸ்டிட்யூட் சாலை பெர்சியாரன் துன் அர்ஷத் அயூப் எனப் பெயரிடப்படுவதாக மாநகர் மன்றத்தின்  வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மரியாதைக்குரிய மற்றும் மதிப்பிற்குரிய தேசிய கல்விப் பிரமுகராக இருந்த மறைந்த துன் அர்ஷத் அயூப்பின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த துன் அர்ஷாத் நாட்டின் உயர்கல்வியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக யு.ஐ.டி எம். வளர்ச்சியில் அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார் என்று மாநகர் மன்றம் ஒரு அறிக்கையில்  கூறியது.

மறைந்த அர்ஷத்தை கெளரவிக்கும் வகையில் செக்சன் 1இல்  உள்ள ஒரு சாலைக்கு அவரின் பெயரைச் சூட்டும்படி சுல்தான் அண்மையில்  உத்தரவிட்டிருந்தார்.


Pengarang :