ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

ஐரோப்பாவில் குரங்கம்மை நோய் மூன்று மடங்கு அதிகரிப்பு- இரு வாரங்களில் 4,500 பேர் பாதிப்பு

மாஸ்கோ, ஜூலை 2- ஐரோப்பாவில் கடந்த இரு வார காலத்தில் குரங்கம்மை நோய் பரவல் மூன்று மடங்கு அதிகரித்து 4,500 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளது.

பெரும்பாலாலும் 21 முதல் 40 வயது வரையிலானவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளுக் கூறினார்.

கடந்த மே மாதம் மத்தியிலிருந்து உலகில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை நோய்த் தொற்றுகளில் 90 விழுக்காடு ஐரோப்பிய பிராந்தியத்தில் பதிவானதை ஆய்வச் சோதனைகள் உறுதிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி நான் கடைசியாக வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு புதிதாக 15 நாடுகளில் 31 குரங்கம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அக்காலக் கட்டத்தித்ல 4,500 புதிய சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டன என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலும் 21 முதல் 40 வயது வரையிலானவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 99 விழுக்காட்டினர் ஆண்களாவர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர்களாவர் என்றார் அவர்.

இந்த நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்த தரவுகளை உலக சுகாதார நிறுவனம் இன்னும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள 51 நாடுகளில் இதுவரை 5,100 பேர் இந்த குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான மூலக்காரணம் என்ன என்பதை நிபுணர்களால் முழுமையாக கண்டறிய முடியவில்லை.


Pengarang :