ECONOMYSELANGOR

சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி- 65 விழுக்காட்டினர் மனநிறைவு

கோல லங்காட், ஜூலை 4– சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நிர்வாகம் குறித்து 65 விழுக்காட்டு மாநில மக்கள் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் தலைமைத்துவம் மீதான மக்களின் கண்ணோட்டம் தொடர்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தை பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் ஆட்சி புரியும் விதம் குறித்து 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் மனநிறைவு கொண்டுள்ளதை எனக்கு கிடைத்த தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்ப காலம் தொட்டு தற்போது வரை அமல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்கள் மனநிறைவு கொண்டுள்ளனர். அவர்களின் தேவையை அறிந்து கொள்வதற்கு நாங்கள் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டோம். அது நமக்கு இப்போது சாதகமான பலனைத் தருகிறது என்றார் அவர்.

அமானா கட்சியின் பொருளாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் இங்குள்ள கோல லங்காட் கூடைப்பந்து அரங்கில் நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விருந்து நிகழ்வில் சிலாங்கூர் மாநில  அமானா தலைவர் இஷாம் ஹஷிம், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ தெங் சாங் கிம்,  அமான் பொர்ஹான் ஷா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றி அமிருடின் மாநில அரசு அரசியல் இனிப்புகளை மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக, அவர்களின் நல்வாழ்வுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது என குறிப்பிட்டார்.


Pengarang :