ECONOMYSELANGOR

இந்திய மாணவர்களின் கல்வி நிலை, தொழில் பயிற்சிக்கான சிறப்புக் குழுவை மாநிலம் அமைக்கவுள்ளது

கிள்ளான், ஜூலை 4: 2023ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்திய சமூகத்தின் வளர்ச்சியை திட்டமிட சிலாங்கூர் ஒரு சிறப்புக் குழுவை அமைக்கும்.

பள்ளிகள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி (TVET) மற்றும் தொழில் முனைவு உள்ளிட்ட சமூகத்தால் எழுப்பப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கவுன்சில் ஆய்வு செய்து தீர்வு காணவுள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்த விஷயத்தை நாம் ஆழமாக ஆராய்வதன் முக்கியத்துவத்தை நான் காண்கிறேன். நாங்கள் இனி கனவுகளைப் பற்றி பேச விரும்பவில்லை, செயல் திட்டங்களே முக்கியம்  அதற்கான நேரம்  இது என்றார்.

“எல்லாவற்றையும் முடிவெடுக்க முடிந்தால், மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே இந்த சிறப்பு கவுன்சில் அமைக்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள எக்மார் ஹோட்டலில் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் மேம்பாட்டை வடிவமைக்கும்  ஒரு  ஆய்வரங்கத்திற்கு பின்  அவர் இவ்வாறு கூறினார்.

63 அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 96 பங்கேற்பாளர்கள் ஒன்றிணைத்த நிகழ்ச்சியில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் சியூ ஃபூக் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், இந்திய சமூகத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை (பி40) பீடித்துள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, கவுன்சிலின் உறுப்பினர்கள் பொருத்தமான வேட்பாளர்களை தனது தரப்பு அடையாளம் காணும் என்று குணராஜ் கூறினார்.

“இன்று பங்கேற்பாளர்கள் உடனான கலந்துரையாடலின் விளைவாக, திட்டத்தைக் கையாளுவதற்கு தேவையான பட்ஜெட்டை இப்போதுதான் திட்டமிட முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :