ECONOMYSELANGOR

பார்வையற்ற 32 இளைஞர்கள் புக்கிட் டிண்டிங் குன்றை அடைந்து சாதனை

கோலாலம்பூர், ஜூலை 5- சாதனைகளைப் படைக்க உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர் பார்வையற்ற 32 இளைஞர்கள். பார்வை இல்லாத நிலையிலும் அவர்கள் வங்சா மாஜூவிலுள்ள புக்கிட் டிண்டிங் குன்றின் உச்சியை அடைந்து சாதனைப் படைத்துள்ளனர்.

மலேசிய பார்வையற்றோர் சங்கம் (எம்.ஏ.பி.) ஏற்பாடு செய்தி மாற்றுத் திறனாளிகள் சாகசச் செயல் திட்டத்தின் கீழ் இந்த மலையேறும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வருகையாளர்களை பெரிதும் ஈர்க்கக்கூடிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் அழகை ரசிப்பதற்குரிய வாய்ப்பினை  பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கும் நோக்கில் இத்திடம் ஏற்பாடு செய்யப்பட்டதாக எம்.ஏ.பி. தலைமை செயல்முறை அதிகாரி ஜோர்ஜ் தோமஸ் கூறினார்.

இயற்கை வளங்களையும் காடுகளையும் பராமரிப்பதில் அரசாங்கம் காட்டி வரும் அக்கறையை அத்தரப்பினருக்கு எடுத்துரைக்கும் நோக்கிலும் இந்த  மலையேறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

பார்வையற்றோர் சங்கத்தின் இளைஞர், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலையேறும் திட்டத்தில் 14 தன்னார்வலர்களும் எம்.ஏ.பி. பணியாளர்களும் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய திட்டங்களை எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் மேலும் விரிவான முறையில் மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஜோர்ஜ் தோமஸ் தெரிவித்தார்.


Pengarang :