ECONOMYNATIONAL

கெஅடிலானில் பகைமையில்லை- கட்சித் தேர்தல் ஒற்றுமையை பாதிக்கவில்லை- அன்வார்

ஷா ஆலம், ஜூலை 7- இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போல் கட்சியின்  ஒற்றுமையைப் பாதிக்கவில்லை டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கட்சியின் தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் நடைபெற்றதோடு அதன் முடிவுகள் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கட்சியின் சித்தாந்தங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதற்குரிய சூழலும் உருவானதாக அவர் சொன்னார்.

கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை நடைபெற்ற தேர்தல் கடுமையான பகைமைப் போக்கை உருவாக்கவில்லை. ஆகவே, கசப்புகளை எளிதில் தணிக்க முடியும் என்றார் அவர்.

மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நேர்காணல் வரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சிலாங்கூர் கினி அக்கப்பத்திலும் சிலாங்கூர் டிவி யூடியூப்பிலும் கட்டம் கட்டமாக ஒளிபரப்பாகும்.

இந்த நேர்காணலில் விலைவாசி உயர்வு, பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு, கட்சித் தாவல் தடைச்சட்டம், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் 22 மாத கால ஆட்சிக் ஆகிய விவகாரங்கள் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் விரிவாக விவரிப்பார்.

 


Pengarang :