ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிப்பு- நேற்று 3,561 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 7- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் மூவாயிரத்தைத் தாண்டியது. நேற்று இந்நோய்க்கு 3,561 பேர் இலக்கானார்கள்.

நேற்றைய தொற்றுகளில் 3,552 உள்நாட்டினர் மூலமாகவும் 9 வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகவும் பரவியதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 82 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,932 ஆகவும் நேற்று முன்தினம் 1,918 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 58 ஆயிரத்து 558 பேராக உயர்ந்துள்ளது.

ஆகக் கடைசியாக் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி மூவாயிரத்திற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவான. அன்றைய தினம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,092 ஆக இருந்தது.

ஒமிக்ரோன் நோய்த் தொற்றின் துணை திரிபுகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவை வெகு விரைவாக பரவுவதால் கோவிட்-19 நோய்த் தொற்று விஷயத்தில் இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பொது மக்களுக்கு நினைவுறுத்தியிருந்தார்.


Pengarang :