ECONOMYSELANGOR

 ”மலேசிய இந்தியச் சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்”  அமல் படுத்தல் மீது கண்காணிப்பு

கிள்ளான் ஜூலை 9 –கடந்த வாரம் நடைபெற்ற  கிள்ளான் எக்மார் விடுதியில் ”மலேசிய இந்தியச் சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்” என்ற கருத்தரங்கத்தின் பின் இன்று சனிக்கிழமை  கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அலுவலகத்தில் அவருடன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ்  சந்தியாகோ   இணைந்து சில விளக்கங்களைப் பத்திரிக்கைகளுக்கு  அளித்தனர்.

இப்பொழுது நாம் மீண்டும்- மீண்டும்  சமுதாயப் பின்னடைவுக்கான பழைய காரணங்களில்  இறங்கி விவாதிக்க விரும்ப வில்லை. அதனால் சமுதாயத்தின் பொருளாதார ஆற்றலோ நிலையோ உயரப் போவதில்லை. ஆனால் கடந்த காலத் தவறுகளிலிருந்து படித்துக்கொண்ட பாடங்களைப் படிப்பினையாகக் கொள்ளச் சில எடுத்துக் காட்டுகளை மட்டுமே கூறுவோம் என்றார்.

உதாரணமாக 2017 ம்  ஆண்டில் முன்னைய நஜிப் அரசு வழங்கிய இந்தியச் சமுதாயத்திற்கான  பெருந்திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றார். அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் கல்வி, வீட்டுடமை, வேலை வாய்ப்பு, ஊதியம், உடல் நலம், இளைஞர் என்று பல பிரிவுகளைச் சுட்டிக்காட்டினர்.

அப்பொழுது,  செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறுகையில் சற்று முன் மாண்புமிகு சார்ல்ஸ்  சந்தியாகோ  குறிப்பிட்டது போல் உடனடி மேம்பாட்டு நடவடிக்கையாகச் சிலாங்கூரின் தீர்வு பற்றி கூறினார்.

சிலாங்கூரில் உள்ள 10 நகாரண்மைக்கழகம் மற்றும் மாநகர் மன்றத்தில் 4 கில் அரசாங்க மின்சாரச் சுடலைகள் உண்டு, அடுத்துக் கோலச் சிலாங்கூர் பகுதி சுடலைக்கான ஏற்பாடுகளைச் செய்ய டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

அதே போல் ஏழை மாணவர்கள், கல்வியைக் கைவிடுவது, சிறு வயது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்குகள் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தொடர் முயற்சிகளை, பயிற்சிகளை மேற்கொள்ள மிட்லெண்ட்ஸ் மாணவர் விடுதியைத் திறப்பதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளர்.

தமிழ்ப்பள்ளிகளுக்குச்  சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் ஆண்டு மானியத்தின் பயனால் 2007ம் ஆண்டுக்கு முன்பு உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை ஒப்பிட்டால் சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள உயர்வைக்  காண முடியும் என்று சார்ல்ஸ்  சந்தியாகோ  குறிப்பிட்டார், இந்த ஒப்பிடுகளை நாம் வழங்குவது மற்ற மாநிலங்களும் இந்த முன் உதாரணத்தை பின் பற்றவே என்றார்.

மேலும் செய்திகள் தொடரும்


Pengarang :