ECONOMYHEALTHSELANGOR

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பூஸ்டர், சிறார்களுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 12- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி மற்றும் சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.

இந்த தடுப்பூசியைப் பெற விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள செல்கேர் கிளினிக்குகளுக்கு நேரில் வரலாம் என்று செல்கேர் கூறியது.

செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள செல்கேர் கிளினிக்குகளில் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஐந்து வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கான இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசியும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று செல்கேர் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

கடந்தாண்டு டிசம்பர் தொடங்கி கடந்த டிசம்பர் வரை செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

செல்வேக்ஸ் ரெமாஜா எனும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தையும் சிலாங்கூர் அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடக்கியது. சுகாதார அமைச்சின் ஒப்புதலுடன் இத்திட்டத்திற்கு 150,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.


Pengarang :