ECONOMYNATIONAL

2022 முதல் காலாண்டில் இ.பி.எஃப். உறுப்பினர்கள் எண்ணிக்கை 146,000 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 12– இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் எண்ணிக்கை 57 விழுக்காடு அதிகரித்து 146,000 ஆக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.

அரசு சார்பு நிறுவனங்களின் சூழியல் முறையை வலுப்படுத்தும் முயற்சியாக மலேசியர்களின் சமூக பாதுகாப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட  நீண்டகால வியூகத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைகிறது என்று அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பெரும்பாலான மலேசியர்கள் மத்தியில் வயதான காலத்திற்கு தேவையான சமூக பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு  குறைந்தே காணப்படுகிறது என்று அவர் சொன்னார்.

ஊழியர் சேம நிதி வாரியத்தின் தக்காபுல் ஐ-லிண்டோங் மற்றும் காப்புறுதி திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :