ECONOMYNATIONAL

வெளிநாடுகளிலுள்ள சொத்துகள் பறிமுதலா? பெட்ரோனாஸ் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 13- தங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படையற்றது என்பதோடு இவ்விவாரத்தை தாங்கள் சட்டரீதியாக அணுகி தங்களைத் தற்காத்துக் கொள்ளவிருப்பதாக பெட்ரோனாஸ் நிறுவனம் திட்டவட்டமாக கூறியது.

“மலேசியா மீதான 1,500 கோடி அமெரிக்க டாலர் உரிமை கோரலை வழக்கறிஞர்கள் வலியுறுத்தியதன் விளைவாக பெட்ரோனாஸ் துணை நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன “என்ற தலைப்பில் ஃபைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் அந்த தேசிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம் இவ்வாறு கூறியது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட இரு நிறுவனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான அறிக்கையை தாங்கள் இம்மாதம 11 ஆம் தேதி பெற்றதாக  அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

அஜர்பைஜான் குடியரசிலுள்ள பெட்ரோனாஸ் அஜர்பைஜான் மற்றும் பெட்ரோனாஸ் சவுத் கௌக்கசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட தொகை நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கியது.


Pengarang :