ECONOMYSELANGOR

ஷா ஆலம் அரங்கின் மறு மேம்பாட்டிற்கு மாநில அரசின் நிதி பயன்படுத்தப்படாது- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 18– ஷா ஆலம் அரங்கின் மறு மேம்பாட்டிற்கு மாநில அரசின் நிதி பயன்படுத்தப்படாது என்று மந்திர புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்புறவான முறையில் அமையவுள்ள இந்த அரங்கின் மறு மேம்பாட்டுப் பணிகள்  மாநில அரசின் உட்படுத்தியிருக்காது என அவர் சொன்னார்.

அந்த அரங்கை மறுசீரமைப்பு செய்வதற்கு தேவைப்படும் 78 கோடியே 70 லட்சம் வெள்ளி செலவினத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகள் மற்றும் செயலறிக்கைகளை பரிசீலித்தப் பின்னர் ஷா ஆலம் அரங்கை மறுசீரமைப்புச் செய்ய தாங்கள் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் அரங்கின் அவல நிலை மற்றும் அதன் பிரச்னைகளை விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் இருந்த போதே தாம் நன்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய வசதிகளுடன் அந்த அரங்கம் காணவுள்ள மறுமேம்பாடு மாநில மக்களுக்கு புதிய வரலாற்று அத்தியாயமாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.

ஷா ஆலம் அரங்கின் பிரச்னைகள் எனக்கு புதிதல்ல. மலேசிய கிண்ணத்தை சிலாங்கூர் அணி இறுதியாக வென்ற அந்த இனிய நினைவுகள் இன்னும் எனது மனதில் பசுமையாக உள்ளன என்றார் அவர்.

அரசாங்க-தனியார் துறைகளில் ஒத்துழைப்புடன் ஷா ஆலம் அரங்கம் மேற்படுத்தப்படுவதால் மாநில அரசின் நிதி இதில் பயன்படுத்தப்படாது என்று அமிருடின் கடந்த 15 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :