ECONOMYNATIONAL

பொருளாதாரம், மக்கள் நலனை வலுப்படுத்தும் திட்டம் ஜூலை 25 இல் தாக்கல் 

ஷா ஆலம், ஜூலை 19- மக்களின் தேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றுவதை இலக்காக கொண்ட முதல் சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படும்.

மக்களின் சமூக பொருளாதாரத் தேவைகளை மையமாக கொண்ட இந்த திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது, மற்றும் சமூக அம்சங்களையும் மாநில அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான நிலையானத் திட்டங்கள், விவேக நிர்வாக முறை, பொது மக்கள் மற்றும் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும் இத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.-1 மேம்பாட்டு ஆவணம் விரிவான அளவிலும் நேர்த்தியான முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதோடு புதிய சவால்களை கையாளும் திறன்படைத்த வாழும் ஆவணமாகவும் திகழும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டம் தொலைநோக்கு, கட்டமைப்பு, இலக்கு சீரமைப்பு ஆகிய நான்கு முதன்மை கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் கட்டத்தில் குறைபாடு விபரங்கள் மற்றும் மேம்பாட்டு உள்ளடக்கம் ஆகியவை உட்படுத்தப்படும்.

மூன்றாம் கட்டத்தில் திட்ட விபரம் மற்றும் முன்னுரிமைக்கும நான்காம் கட்டத்தில் அமர்வுகள் சரிபார்ப்பு மற்றும் அறிக்கையை இறுதி செய்வது ஆகியவை இடம் பெறும்.


Pengarang :