EKSKLUSIFSELANGOR

சூழ்ச்சிக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- சிலாங்கூர் பக்கத்தான் தவைர்களுக்கு அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- சிலாங்கூரை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த போதிலும் வரும் பொதுத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம் என சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரசாரங்களின் வாயிலாக சிலாங்கூர் ஹராப்பான் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எல்லா விதமான தந்திரங்களையும் எதிரிகள் கையாளக்கூடும் என்று கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் ஃபாமி பாட்சில் கூறினார்.

நாம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த போதிலும் இந்த தேர்தலை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நாம் முன்பு வென்றோம் என்பதற்காக தொடர்ந்து வெல்வோம் என எதிர்பார்க்க முடியாது. மக்கள் நம்மீது பற்று கொண்டிருந்தார்கள் என்பதற்காக தொடர்ந்து பற்று கொண்டிருப்பார்கள் என கருத முடியாது என்றார் அவர்.

நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருக்க வேண்டும். சிலாங்கூர் மாநிலம் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் வழி நடத்தக்கூடிய இடத்திலும் இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

கோத்தா டாமன்சாராவில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரும் 15வது பொதுத் தேர்தலில்  வாக்காளர்கள் குறிப்பாக முதன் முறையாக வாக்களிக்கவுள்ள தரப்பினர் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை உறுதி செய்யும்படி கட்சித் தலைவர்களை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.


Pengarang :