ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தொடர்பான சட்டம் குறித்து ஜூலை 27 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 25: கட்சித் தாவல் தொடர்பான சட்டம் ஜூலை 27ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்றும், அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் மறுநாளே அது நிறைவேற்றப்படும்  என்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

இந்த மசோதா ஜனவரி முதல் பல  அமர்வுகளில் விவாதிக்கப்பட இருந்த ஒன்றாகவும், ஏற்கனவே  மக்களவையில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்த விஷயம் பரவலாக அறியப்பட்ட ஒரு விவகாரம் என அவர் கூறினார்.

தற்போது உள்ள மற்ற சட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த சட்டமூலத்திற்கான வடிவமும் வித்தியாசமானது, ஏனெனில் இது தெரிவுக்குழுவில் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் அச்சிடப்பட்டு மற்றும் அட்டர்னி-ஜெனரல் அவையால் உருவாக்கப்படவில்லை.

“எனவே, இந்த மசோதாவின் நடைமுறையை நான் அங்கு விளக்க விரும்புகிறேன், அனைதது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே தெரியும். அதனால் ஜூலை 27ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டு 28ஆம் தேதி மாலை, 2.30 மணிக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சட்ட விவகாரப் பிரிவு மற்றும் அட்டர்னி ஜெனரல் திணைக்களத்தின் (ஏஜிசி) அரசாங்கத்தன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு ஜூலை 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் மறுநாள் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் முன்னதாக தெரிவித்தார்.

அந்த சந்திப்பில், திவால் சட்டம் பற்றி கேட்டபோது, திவால் நிலையை திறம்பட கையாள்வதற்கான மற்ற நாடுகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.

அரசாங்கம் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் ரிங்கிட் மதிப்பை RM50,000 இலிருந்துRM100,000  ஆக உயர்த்தியிருந்தாலும், புதிய வரம்பு மதிப்பை இப்போது அதிக தொகைக்கு அதிகரிப்பது நல்ல தீர்வாகாது, குறிப்பாக கோவிட்-19 தாக்கத்தினால் என்று அவர் கூறினார்.

“நாம் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும், 2030-க்குள்தொழில் முனைவோர் தேசத்தை நோக்கி நகர்கிறோம், இந்த திவால்நிலையில் பலர் ஈடுபட்டால், நமது இளைஞர்கள் முயற்சியில் இருந்து ஓடினால், அது மலேசியாவை வணிகர்களின் தேசமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்.” அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், திவால் தொடர்பான சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும், அது ஒருபோதும் முழுமையாக மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


Pengarang :