ECONOMYSELANGOR

முதல் சிலாங்கூர் திட்டம் நாளை சட்டமன்றத்தில் தாக்கல்- சிலாங்கூர் டிவி வழி நேரடி ஒளிபரப்பு

ஷா ஆலம், ஜூலை 26- நாளை புதன் கிழமை சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் சிலாங்கூர் திட்டம் சிலாங்கூர் டிவி மற்றும் மீடியா சிலாங்கூர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அந்த ஐந்தாண்டுத் திட்ட தாக்கல் நிகழ்வு குறித்த விரிவான விபரங்களை சிலாங்கூர்  ஜெர்னல், சிலாங்கூர் கினி, மாண்டரின் மற்றும் சிலாங்கூர் இன்று தமிழ் இணைய ஏடுகள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தாக்கல் செய்யப்படும் இந்த திட்டத்தின் உள்ளடக்கம் சிலாங்கூர் கினி  பத்திரிகையின் ஜூலை 28-ஆகஸ்டு 3 ஆம் தேதி பதிப்பிலும் இடம் பெறும்.

சிக்கலான நடப்புச் சூழலின் விளைவாக ஏற்பட்டுள்ள சவால்களைக் சமாளிப்பதற்கு தேவையான ஆக்கத்திறனை உருவாக்குவதில் இந்த முதல் சிலாங்கூர் திட்டம் முக்கிய பங்காற்றும் என்று அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.

முதலீட்டு வியூகத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு, சமூக மேம்பாடு ஆகிய அம்சங்களை இந்த முதல் பொருளாதாரத் திட்டம் உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலின் நீடித்த  நிலைத்தன்மையை உறுதி செய்வது, விவேக நிர்வாக முறை, பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆக்ககரமான கலந்துரையாடல் ஆகியவற்றையும் இந்த திட்டம் இலக்காக கொண்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :