ECONOMYHEALTHNATIONAL

புதிதாக 3,300 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- 12 பேர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஜூலை 26– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,300 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,720 ஆக இருந்தது.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 17 ஆயிரத்து 079 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று இந்நோயிலிருந்து 5,227 பேர் குணமடைந்தனர். இதன் வழி கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 72 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 12 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. அவற்றில் மூன்று சம்பவங்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே நேர்ந்தவையாகும்.

மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-  கோலாலம்பூர் (1,060), சிலாங்கூர் (943), பேராக் (210), சபா (203), பினாங்கு (172), கெடா (145), ஜோகூர் (109), நெகிரி செம்பிலான் (105), மலாக்கா (102), புத்ரா ஜெயா (77), கிளந்தான் (55), சரவா (36), பகாங் (35), திரங்கானு (35), லாபுவான் (7), பெர்லிஸ் (6).


Pengarang :