ECONOMYSELANGOR

இவ்வாண்டில் 10 சிலாங்கூர் கூ வீடமைப்புத்  திட்டங்களுக்கு ஆட்சிக்குழு ஒப்புதல்

ஷா ஆலம், ஜூலை 26- இவ்வாண்டில் 4,818 வீடுகளை உள்ளடக்கிய பத்து சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த கட்டுப்படி விலை வீடுகள் கோம்பாக், கிள்ளான், உலு லங்காட் மற்றும் சிப்பாங்கில் கட்டப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 1 தேதி வரை 4,818 வீடுகளை உள்ளடக்கிய பத்து வீடமைப்புத் திட்டங்களுக்கு இரு கட்டங்களில் மாநில ஆட்சிக்குழு அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அந்த வீடமைப்புத் திட்டங்கள் ரூமா சிலாங்கூர் கூ, ரூமா இடாமான் மற்றும் ரூமா ஹராப்பன் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு நவம்பர் வரை மொத்தம் 24,428 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் 9,294 ‘சி‘ பிரிவைச் சேர்ந்தவை எனக் கூறிய அவர், ‘டி‘ பிரிவில் 7,822 வீடுகளும் ‘பி‘ பிரிவில் 4,122 வீடுகளும் ‘ஏ‘ பிரிவில் 2,019 வீடுகளும் ‘இ‘ பிரிவில் 1,171 வீடுகளும் அடங்கியுள்ளன என்றார்.


Pengarang :