ECONOMYSELANGOR

மாநிலத்தின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய ஐந்து துறைகளுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், ஜூலை 27- மாநிலத்தின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய முதல் சிலாங்கூர் திட்டத்தில் ஐந்து துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தாக்கும் சக்தி, பேரிடர் மேலாண்மை, நீர் நிர்வாகம், கார்பன் அளவைக் கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை, பல்லுயிர் மற்றும் இயற்கை வளம் ஆகியவை அந்த ஐந்து துறைகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

நீடித்த மற்றும் சமூகவியல், நிர்வாக நடைமுறை கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக அணுகுமுறையில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிலையான சுற்றுச்சூழல் விவகாரம் அனைத்துலக நிலையில் எப்போதும் முதன்மை அம்சமாக விளங்குவதாக மாநில சட்டமன்றத்தில் இன்று முதல் சிலாங்கூர் திட்டத்தை  தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

நீடித்த இடர்பாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை மையமாக கொண்டுள்ளதை உலக பொருளாதார ஆய்வரங்கு வெளியிட்ட 2021 ஆம் ஆண்டிற்கான உலக இடர் அறிக்கை காட்டுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :