ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் இலவச இணையத் தரவு சேவையின் வழி 30,000 பேர் பயன்

கோம்பாக், ஆக 1-  மாநிலத்தில் இளங்கலை பட்டதாரிகள் உட்பட 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு வருடத்திற்கான இலவச இணையத் தரவு சேவையைப் பெறுவதாக மந்திரி புசார் கூறினார்.

தொலைத் தொடர்பு வசதிகளில் இடையூறின்றி மாணவர்கள் தங்கள் பாடங்களை மீள்பார்வை செய்ய இந்த இலவச இணையத் தரவு சேவைத் திட்டம் உதவுகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாணவர்களுக்கு 12 மாதங்களுக்கு இலவச இணையத் தரவு சேவையை வழங்கக்கூடிய 30,000 க்கும் மேற்பட்ட இலவச சிம் கார்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறிய அவர், அக்கார்டுகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டன என்றார்.

இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்கள் இலவச இணையச் சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சிறப்பாக இருந்தால் இத்திட்டத்தைத் தொடரும் அதேவேளையில் அதனை மேம்படுத்துவோம் என்று அவர் கூறினார்.

நேற்று, கோம்பாக்கில் உள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைத் தொடக்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் வெள்ளி  ஒதுக்கீட்டில் மாநிலத்தில் 70,000 பேருக்கு   12 மாதங்களுக்கு இலவச சிம் கார்டுகள் மற்றும் இணைய தரவு சேவை வழங்கப்படும்  என்று அமிருடின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி  அறிவித்திருந்தார்.


Pengarang :