ECONOMYSELANGOR

பண்பு நலனை செம்மைப்படுத்த கல்வி உதவுகிறது- மந்திரி புசார் உரை

கோம்பாக், ஆக 1– கல்வி என்பது வேலையைப் பெறுவதில் மட்டுமின்றி மனிதர்களிடையே பண்பு நலனைச் செம்மைப்படுத்துவதிலும் மன முதிர்வை ஏற்படுத்துவதிலும் இணையானப் பங்கினை ஆற்றுகிறது என்று மந்திரி புசார் கூறினார்.

சிறந்த பண்பு கொண்டவர்களை உருவாக்குவதில் அறிவாற்றல் பெரிதும் துணை புரிகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

ஆரோக்கியமான மற்றும் முதிர்ச்சி நிறைந்த சிந்தனை ஆற்றல் கொண்டவர்களை உருவாக்குவதற்கு ஏதுவாக குணநலன்களை செம்மைப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினரின் மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் தற்போதைய தேவையாகும் என்றார் அவர்.

சிலாங்கூர் பாலர் பள்ளி உதவித் திட்டம் உள்பட பாலப் பருவம் தொடங்கி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக எட்டு செயல்திட்டங்களை சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் வரையறுத்துள்ளது.


Pengarang :