ECONOMYNATIONAL

சவால்களுக்கு மத்தியில் 55 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது ஆசியான்

கோலாலம்பூர், ஆக 8- உறுப்பு நாடுகளுக்கிடையிலான சவால்கள் மற்றும் சீனா-அமெரிக்காவின் பகைமைப் போக்கு காரணமாக இப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஆகியவற்றுக்கு மத்தியில் பத்து உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) தனது 55 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

கடந்த 1967 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இந்த ஆசியான் அமைப்பு வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலில்  பல மைல்கற்களை எட்டியிருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் வெறும் காகிதப் புலியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையை மாற்றுவதற்காக சில முன்னெடுப்புகளை அந்த அமைப்பு  மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உறுப்பு  நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை கடந்த 2021 பிப்ரவரி 1ஆம் தேதி மியன்மாரில் நிகழ்ந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மறு ஆய்வு செய்யும் முயற்சியில் அது ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் கம்போடியாவின் நோம் பென் நகரில் நடைபெற்று முடிந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின்போது உறுப்பு நாடுகள் விவகாரத்தில் தலையிடாக் கொள்கைக்கு மாறாக அமைதி முயற்சியில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக மலேசியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தின.


Pengarang :