ECONOMYPENDIDIKANSELANGOR

ஏழு துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்வாதாரத் தொகை- யுனிசெல் வழங்கும்

ஷா ஆலம், ஆக 10- ஏழு முதன்மை துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கைச் செலவின உதவித் தொகையாக 3,000 வெள்ளியை யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் வழங்கும்.

செல்ஃபா எனப்படும் சிலாங்கூர் முன்கள வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படும் என யுனிசெல் கூறியது.

பிஸியோதெராப்பி, உயிரியல் மருத்துவம், தாதிமை, இமேஜிங் மருத்துவம், சுற்றுச்சூழல் சுகாதாரம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக அது தெரிவித்தது.

எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 8 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 16 ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

எனினும், சுகாதார அறிவியல் பிரிவிலுள்ள ஏதாவது ஒரு துறையில் நுழைவதற்கு பதிவு செய்துள்ள மற்றும் நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ள முதல் 15 மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என அந்த உயர்கல்விக் கூடம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.


Pengarang :