ECONOMYSELANGOR

காஜாங் நகராண்மைக் கழகத்தின் நடமாடும் முகப்பிட சேவை வார இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், ஆக 10– காஜாங் நகராண்மைக் கழகத்தின் வருவாய்ப் பிரிவின் ஏற்பாட்டில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடமாடும் முகப்பிடச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை செமினி சமூக மண்டபத்தில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான போதைப் பொருள் எதிர்ப்பு மெர்டேக்கா கார்னிவெல் நிகழ்வில் இந்த இந்த முகப்பிடச் சேவை நடைபெறும் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

ஜாலான் செராஸ், 13வது மைல் பாலாய் ராயா எம்.பி.பி.கே.வில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த முகப்பிடச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செமினியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் செராஸ் 13 மைலில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையலும் இந்த முகப்பிடங்கள் திறந்திருக்கும்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் 25வது வெள்ளி விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட அபராதங்களுக்கு கழிவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :