ECONOMYNATIONAL

விவேக சாலை மேலாண்மை முறை ஊராட்சி மன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஆக 12– இவ்வாண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட விவேக சாலை சொத்து மேலாண்மை முறை ஊராட்சி மன்றங்களுக்கும் விரிவாக்கப்படும்.

கும்புலான் செமெஸ்தா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட செயலியை பயன்படுத்த சில ஊராட்சி மன்றங்கள் ஆர்வம் காட்டி வருவதாக செல்கேம் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் புவியில் தகவல் முறை முதன்மை அதிகாரி அகமது அஃபிக் அய்மான் கூறினார்.

இந்த முறையை தயார்படுத்துவதற்கு எங்களுக்கு ஆறு மாதகாலம் தேவைப்பட்டது. இவ்வாண்டு தொடங்கி பழுதடைந்த சாலைகளை அடையாளம் கண்டு, கண்காணிப்பதற்காக பொதுப் பணித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒப்பந்த நிறுவனத்தை அமைப்பதற்கு ஏதுவாக இந்த முறை தொடர்பில் பயிற்சியும் பரீட்சார்த்த சோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஆகவே, இந்த செயலி முறையை நாங்கள் ஊராட்சி மன்றங்களுக்கும் விரிவுபடுத்த விரும்புகிறோம். சில ஊராட்சி மன்றங்கள் கொள்கை ரீதியில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. எனினும், அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வது அவர்களைப் பொறுத்தது என்றார் அவர்.


Pengarang :