ECONOMYSELANGOR

சட்டவிரோதமாக வீடுகள் விரிவாக்கம்- 10 உரிமையாளர்கள் மீது எம்.பி.கே.எல். நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 13- சட்டவிரோதமான முறையில் வீடுகளை விரிவாக்கம் செய்ததற்காக தாமான் லங்காட் உத்தாமாவிலுள்ள பத்து வீடுகளுக்கு எதிராக கோல லங்காட் நகராண்மைக் கழகம் குற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கட்டிட கட்டுப்பாடு மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது இந்த குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருடின் அஜிசுல் அப்துல் ரஹிம் கூறினார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டுமானங்களை உடைப்பதற்கு சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இரு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரு வார காலத்தில் கட்டுமானங்களை அகற்றத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவற்றை உடைப்பதற்கான நடவடிக்கையை நகராண்மைக் கழகம் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :