ECONOMYHEALTHNATIONAL

நேற்று 3,045 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு- 6 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஆக 15- நாட்டில் நேற்று 3,045 பேருக்கு கோவிட் நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,334 ஆக இருந்தது.

நேற்று பதிவான புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 35 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய நிலவரப்படி 43,431 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 41,759 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 33 பேர் பி.கே.ஆர்.சி. மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1,567 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 26 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் உதவியின்றியும் 46 பேருக்கு சுவாசக் கருவியின் உதவியுடனும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று அறுவர் மரணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 36,083 ஆகியுள்ளது.

மாநில ரீதியாக நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சிலாங்கூர் (1,061), கோலாலம்பூர் (619), சபா (259), பேராக் (221), நெகிரி செம்பிலான் (195), பினாங்கு (119), மலாக்கா (108), ஜோகூர் (98), கெடா (85), புத்ரா ஜெயா (63), பகாங் (54), சரவா (54), திரங்கானு (49), கிளந்தான் (46), பெர்லிஸ் (12), லாபுவான் (2).


Pengarang :