ANTARABANGSAECONOMY

வெளிநாட்டு இந்தோனேசியர்கள் ஆண்டுக்கு 980 கோடி டாலரை தாயகத்திற்கு அனுப்புகின்றனர்

ஜாகர்த்தா, ஆக 25– கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தோனேசியர்கள் ஆண்டுக்கு சராசரி 980 கோடி அமெரிக்க டாலரை தாயகத்திற்கு அனுப்புவதாக பொருளாதார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் அய்ர்லங்கா ஹர்த்தாத்தோ கூறினார்.

இந்த பணம் இந்தோனேசியாவிலுள்ள அத்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பயனைத் தருவதோடு நாட்டின் அந்நியச் செலாவணி வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடாக விளங்கும் இந்தோனேசியா புலம் பெயர்ந்த தங்கள் நாட்டு பிரஜைகளிடமிருந்து அதிக பணத்தைப் பெறும் நாடாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்தோனேசியத் தொழிலாளர்கள் தேசிய வருமானம் மற்றும் பொருளாதார  உற்பத்திக்கு பெரும் பங்காற்றுவதால் நாட்டின் பொருளாதாரத்  தூண்கள் எனவும் அவர்கள் வர்ணிக்கப்படுவதாக அய்ர்லங்கா அறிக்கை ஒன்றில் கூறினார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் தென் கொரியாவில் வேலை செய்யும் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து இந்தோனேசியா 2 கோடியே 20 லட்சம் அமெரிக்க டாலரைப் பெற்றதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :