ECONOMYHEALTHSELANGOR

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை சிகிச்சைக்கு கொண்டுச் செல்ல இலவச சேவை- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

ஷா ஆலம், ஆக 25- மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ஷா ஆலம் மாநகர் மன்றம் இலவச போக்குவரத்து சேவையை வழங்குகிறது.

திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படும் மருத்துவமனைகள் வருமாறு-

• செக்சன் 7 மற்றும் செக்சன் 19 சுகாதார கிளினிக்குகள்
• புக்கிட் கூடா சுகாதார கிளினிக்
• ஷா ஆலம் பெரிய மருத்துவமனை
• சுங்கை பூலோ மருத்துவமனை
• தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை
• மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்

நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையிலும் போக்குவரத்து சேவையைப் பெறுவதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டும் இந்த சேவை வழங்கப்படுவதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.

இந்த சேவைக்காக இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக மாற்றியமைக்கப்பட்ட வேன் மற்றும் மூத்த குடிமக்களுக்காக புரோடோன் எக்ஸோரா கார் ஆகியவை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

இந்த சேவை தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் மாநகர் மன்றத்தின் மேம்பாட்டுத் துறையை 03-55222732 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :