ECONOMYNATIONALSELANGOR

ஏற்றுமதியில் சிலாங்கூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் முன்னிலை

கோலாலம்பூர், ஆக 26- இவ்வாண்டு ஜூலை மாத நிலவரப்படி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் ஐந்து மாநிலங்களில் சிலாங்கூர், ஜோகூர், சரவா, கூட்டரசு பிரதேசம், பினாங்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நாட்டின் ஏற்றுமதியில் 27.9 விழுக்காட்டு பங்களிப்புடன் பினாங்கு முதலிடம் வகிக்கும் வேளையில் அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (23.2 விழுக்காடு), சிலாங்கூர் (18 விழுக்காடு), சரவா (8.7 விழுக்காடு), கோலாலம்பூர் (5.7 விழுக்காடு) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பெரும்பாலான மாநிலங்கள் உயர்ந்த ஏற்றுமதி அளவைப் பதிவு செய்துள்ள நிலையில் ஜோகூர் மாநிலத்தின் கடந்த ஜூலை மாத ஏற்றுமதி 930 கோடி வெள்ளியிலிருந்து 3,110 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

சிலாங்கூர் மாநிலத்தின் ஏற்றுமதி 910 கோடி வெள்ளியாகவும் பினாங்கின் ஏற்றுமதி 760 கோடி வெள்ளியாகவும் கோலாலம்பூரின் ஏற்றுமதி 480  கோடி வெள்ளியாகவும் கெடாவின் ஏற்றுமதி 100 கோடி வெள்ளியாகவும் நெகிரி செம்பிலானின் ஏற்றுமதி 77 கோடியே 25 லட்சம் வெள்ளியாகவும் பதிவாகியுள்ளது.

எனினும், பேராக், பகாங், திரங்கானு, மலாக்கா, கிளந்தான் ஆகிய மாநிலங்கள் குறைவான ஏற்றுமதி அளவைப் பதிவு செய்துள்ளன.


Pengarang :