ECONOMYSELANGOR

சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான ஒதுக்கீடு அடுத்த ஆண்டு RM1 கோடியாக அதிகரிக்கப்படுகிறது

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 28: மாநிலத்தில் அடுத்த ஆண்டு இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு மாநில அரசு RM1 கோடி ஒதுக்கவுள்ளது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இஸ்லாம் அல்லாத  சமயத்தார் தேவை  மற்றும் வசதிக்காக தற்போதைய ஒதுக்கீட்டை விட மேலும் 30 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

“இப்போது இஸ்லாம் அல்லாத சமூகத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு RM70 லட்சம் செல விடப்படுகிறது. உண்மையில், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நம்மை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன அவை RM1 கோடி ஒதுக்கீட்டில் பின் தொடர்கின்றன.

“நான் வீ. கணபதிராவ் அவர்களிடம் தெரிவித்தேன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் விவாதித்தேன், அடுத்த ஆண்டு கோவில்கள் உட்பட இஸ்லாம் அல்லாத சமூகத்தின் வழிபாட்டு தலங்களுக்கான ஒதுக்கீடு முந்தைய தொகையை விட  அதிகரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

அவர் நேற்று சிலாங்கூர் மாநில தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (எஸ்டிடிசி) பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) இந்திய சமூக மேம்பாட்டு கூறுகள் தொடர்பான நிகழ்ச்சியில் இதனைக் கூறினார்.

2008 இல் ஹராப்பான் சிலாங்கூரை ஆட்சி செய்ததில் இருந்து, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான ஒதுக்கீடு வருடத்திற்கு RM30 லட்சமாக இருந்தது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு RM60 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.


Pengarang :