ECONOMYNATIONAL

நாட்டின் பணவீக்கம் ஜூலை மாதம் 4.4 விழுக்காடாகப் பதிவு

கோலாலம்பூர், ஆக 29 – மலேசியாவின் பயனீட்டாளர் விலைக் குறியீடு (சி.பி.ஐ.) ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4.4 சதவீதம் அதிகரித்து 127.9 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 122.5 ஆக இருந்தது.

உணவுக் குறியீடு 6.9 சதவீதமாக அதிகரித்தது  மாதத்தின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக மலேசிய புள்ளியியல் துறையின்  தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் உசிர் மஹிடின்  தெரிவித்தார்.

தேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் பொருளாதார மீட்சியின் கீழ் உள்நாட்டு பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து முதல் 40 சதவீதம் வரை மின்சாரக் கட்டணத் தள்ளுபடியின் விளைவினால் ஏற்பட்ட கடந்த ஆண்டின் குறைந்த அடிப்படை விளைவு காரணமாக இந்த மாதம் மலேசியாவின் பணவீக்கம் அதிகரித்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உணவுப் பொருள்களைப் பொறுத்த வரை இவ்வாண்டு ஜூன் மாதத்துடன்  ஒப்பிடும்போது  ஜூலையில் மெதுவான வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

துணைத் துறைகளைப் பொறுத்த வரை மீன் மற்றும் கடல் உணவுகள் (4.2 சதவீதம்) மற்றும் காய்கறிகள் (7.1 சதவீதம்) ஆக உள்ளன என்றார்.


Pengarang :