MEDIA STATEMENT

முகமது அடிப் மரணம், பத்து பூத்தே தீவு தொடர்பான முழு அறிக்கை நாளை வெளியாகும்

ஷா ஆலம், ஆக 29- தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம் மரணம் தொடர்பான சிறப்பு பணிக்குழுவின் அறிக்கை நாளை வெளியிடப்படும்.

அதே சமயம், பத்து பூத்தே தீவின் சட்ட விவகாரம் தொடர்பான நாளை கிடைக்கப் பெறும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.

நாளை நான் இரு கூட்டங்களுக்கு தலைமையேற்கிறேன். அக்கூட்டங்களில் மறைந்த அடிப் மற்றும் பத்து பூத்தே தொடர்பான இரு அறிக்கைகளை நான் பெறவிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

நேற்று நான் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தொடர்பான கூட்டத்திற்கு தலைமையேற்றதோடு அதன் தொடர்பான அறிக்கையையும் பெற்றுள்ளேன் என்றார் அவர்.

அந்த மூன்று அறிக்கைகளும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக வெகு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முகமது அடிப்பின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி கூறியிருந்தார்.

கடந்த 2018  நவம்பர் 27 ஆம் தேதி யுஎஸ்ஜே 25, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலின் போது தீயணைப்பு வீரரான அடிப் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார்.


Pengarang :