Orang ramai mendapatkan maklumat mengenai STDC pada program Jelajah Selangor Penyayang di Laman Majlis Bandaraya Petaling Jaya (MBPJ), Petaling Jaya pada 24 Julai 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக்கில் நாளை தொழில்திறன் கல்வித் திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், செப் 4- கோம்பாக்கில் நாளை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் பென்யாயாங் கல்வி பயணத் தொடர் நிகழ்வில் பங்கேற்கும்படி எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிலாங்கூர் மாநில தொழில்திறன் மேம்பாட்டு மையம் (எஸ்.டி.டி.சி.) மற்றும் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் பயிற்சி துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு கோம்பாக் மாவட்ட  அலுவலகத்தில் நடைபெறும்.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் மற்றும் தங்கள் பெற்றோரின் அடையாளக் கார்டு நகல் மற்றும் எஸ்.பி.எம். தேர்வு சான்றிதழ் நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.

இந்த பயிற்சித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-32812621 என்ற எண்களில் அல்லது 019-34241111 என்ற வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

முன்னதாக, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள உபகாரச் சம்பளத்துடன் கூடிய தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்திலுள்ள எஸ்.பி.எம். முடித்த மாணவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 


Pengarang :