ECONOMYHEALTHSELANGOR

செல்கேட் நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு இந்தோனேசியாவுக்கும் விரிவாக்கம்

ஜகார்த்தா, செப் 5- செல்கேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான செல்கேட் ஹெல்த்கேர்  இந்தோனேசியா  நாட்டின் சுகாதாரத் துறையில் புதிய வரவான பிரிக்ஸியாவுடன் இணைந்து சுகாதார மற்றும் ஒருங்கமைப்பு சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தங்களின் அனுபவத் தொகுப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக அவ்விரு நிறுவனங்களும் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  இரு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் தொலைதூரத்தில் இருந்து ஆலோசனைகளைப் பெற இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்த முயற்சி நிறுவனங்களின் போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று  செல்கேட் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குனர் நூர் ஹிஷாம் முகமட் கவுத் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மலேசியாவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு விமான டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் தேவையான மருத்துவ சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய பிரிக்ஸியா நிறுவனம்  உதவும்.

செல்கேட் துணை நிறுவனங்களுடன்  பிரிக்ஸா  தனது பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கும் மற்ற சேவைகளை நீட்டிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கூறினார்.

செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் கீழ் தற்போது மலேசியாவில் 2,400 ஆய்வகங்கள், கிளினிக்குகள் மற்றும் 249 மருத்துவமனைகள் செயல்படுகின்றன.


Pengarang :