ECONOMYSELANGOR

பிகேஎன்எஸ் தொழில்முனைவோர் கண்காட்சியில் 149 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,000 வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், செப்டம்பர் 6: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) முதல் பதிப்பான சிலாங்கூர் தொழில்முனைவோர் கண்காட்சி (செல்பிஸ் 2022) செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 149 கண்காட்சியாளர்களையும் 5,000 வருகையாளர்களையும் ஈர்த்தது.

இன்று ஒரு அறிக்கையில், பிகேஎன்எஸ் உணவு மற்றும் பானத் துறையில் 48 விழுக்காடு தொழில்முனைவோர் கண்காட்சி இடங்களை நிரப்பியுள்ளனர், அதைத் தொடர்ந்து சில்லறை வணிகத்தில் தொழில்முனைவோர் 28 விழுக்காடும், மீதமுள்ள 24 விழுக்காடு பேர் சேவைத் துறையில் இருந்தும் பங்கெடுத்தனர்.

“செல்பிஸ் 2022 இல் தொழில்முனைவோர்களால் காட்டிய ஆர்வம் தொழில் உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

“இந்த தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களில் செழிக்க ஒரு விரிவான ஆதார தளத்தை வழங்குவது எங்கள் கடமைகளில் ஒன்றாகும்” என்று கார்ப்பரேட் மற்றும் தொழில்முனைவோர் துணை தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கஸ்டன் கூறினார்.

அறிக்கையின்படி, செல்பிஸ் 2022 என்பது பிகேஎன்எஸ் இன் தொழில்முனைவோர் திட்டங்களான முன்னோடி தொழில்முனைவோர் திட்டம், வணிக தொடக்க திட்டம் (புரோட்யூன்), மாணவர் தொழில்முனைவோர் திட்டம் (பியுஎம்) மற்றும் பட்டதாரி தொழில்முனைவோர் திட்டம் (க்ரோ) ஆகியவற்றின் விரிவாக்கமாகும்.

சிறுவயதிலிருந்தே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, முன்னோடி தொழில்முனைவோர் திட்டம், ஆரம்பத்தில் இருந்து வளர்ந்து உயர்நிலை தொழில் ஆற்றல் பெற்றவர்களாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டு நீண்ட காலத்திற்கு சிலாங்கூரில் பொருளாதாரப் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது என்றார்.

மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, பிகேஎன்எஸ் கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்முனைவோரை வளர்த்து வருகிறது.

இன்றுவரை, பிகேஎன்எஸ் அதன் திட்டங்கள் மூலம் 41,000க்கும் மேற்பட்ட வணிக உரிமையாளர்களுக்கு உதவியிருக்கிறது.


Pengarang :