ECONOMYSELANGOR

செக்சன் 16 பிகேஎன்எஸ் அடுக்குமாடி குடியிருப்பு வசிக்கத் தகுதியற்றது! அதற்கு நிறைய பழுதுபார்ப்பு தேவை

ஷா ஆலம், செப்டம்பர் 8: இங்கு ஷா ஆலம் செக்சன் 16 ல் உள்ள சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) அடுக்குமாடி குடியிருப்புகள் பல வித பழுதுகளை  கொண்டுள்ளது. அதை சீரமைக்கும் பணிகள் அதிகம் தேவைப் படுகின்றன, அது முற்றாக வசிக்கத் தகுதியற்றவையாகுவதிலிருந்து மீட்க வேண்டும்.

1969 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டுத் திட்டம் வயரிங், வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக கோத்தா அங்கரிக்கின் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

“அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற அமைப்பின் தோற்றம், இன்னும் அழியாமல் அப்படியே இருப்பது போல் காட்சியளித்தாலும் அதன் உள்ளே, அதற்கு நிறைய மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.

“இது 40 ஆண்டுகளுக்கும் மேலானது, அதனால்தான் முதல் சிலாங்கூர் திட்டமான(RS-1) பிகேஎன்எஸ் அடுக்குமாடி வீடுகள் மறு சீரமைப்பு திட்டத்தை மாநில அரசு சேர்க்க வேண்டும் என்று நான் ஒருமுறை பரிந்துரைத்தேன்” என்று நஜ்வான் ஹலிமி கூறினார்.

நேற்றிரவு பேஸ்புக் மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவியில் ஒளிபரப்பான  நேரடி பேச்சு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிலாங்கூர் சட்டமன்ற அமர்வில் RS-1 பற்றி விவாதித்தபோது, மத்திய அரசு உட்பட அனைத்து மாநிலங்களும் முன்னுதாரணமாக பயன்படுத்த வேண்டிய திட்டத்தை செயல்படுத்தியது நஜ்வான் பாராட்டினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி RS-1 ஐ வழங்கினார், இது ஐந்து வருட காலத்திற்கு RM21,244 கோடி மொத்த மதிப்பை உள்ளடக்கிய மாநில வளர்ச்சிக் கட்டமைப்பாகும்.


Pengarang :