ECONOMYSELANGOR

ஐந்தாண்டுத் திட்டத்தில் வான் போக்குவரத்துத் துறைக்கு முன்னுரிமை

சுபாங் ஜெயா, செப் 9- அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளில் விண்வெளி மற்றும் வான் போக்குவரத்து துறையும் ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அனைத்துலக நிலையில் குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வான்போக்குவரத்து மையமாக சிலாங்கூரை மேம்படுத்துவதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிலை மாற்றத் திட்டங்களில் ஒன்றாக சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேம்படுத்தப்படும் சிலாங்கூர் வான் பூங்கா உருவாக்கமும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் வட்டார பிராந்தியத்தை உரைவாக்குவதில் ஆர்வம் காட்டும் நடப்பு மற்றும் புதிய தொழில் துறையினரின் தேவைகளை ஈடுசெய்வதற்காக இந்த பூங்கா அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எஸ்.ஏ.எஸ். எனப்படும் 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் வருகை புரிந்தனர்.

நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ், இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸாரி ஹசான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :