ECONOMYNATIONALSELANGOR

காமன்வெல்த் பேட்மிண்டன் விளையாட்டு வெற்றியாளர் தீனா, சிலாங்கூரில் உயரிய பரிசு தொகையை வென்றார்

ஷா ஆலம், செப் 9: ஹனோய் சீ விளையாட்டுப் போட்டி மற்றும் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மலேசியக் குழுவிற்குப் பதக்கங்களை பெறுவதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மொத்தம் 28 சிலாங்கூர் விளையாட்டு வீரர்கள் மாநில அரசிடமிருந்து RM92,900 சிறப்பு ஊக்கத் தொகையை பெற்றனர்.

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கியது, தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்கமளிக்கும், இந்த சிறப்புச் சலுகைகளை பேட்மிண்டன் வீராங்கனை எம். தீனா பாராட்டி வரவேற்றார். விளையாட்டில் தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்குவிப்பதாக பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  இரண்டு தங்கப் பதக்கம் வென்ற எம் தீனா கூறினார்.

மொத்தம் RM23,000 வெள்ளியை மாநில அரசிடமிருந்து பரிசாக பெற்ற பேட்மிண்டன் வீரர், எதிர்வரும் போட்டிகளை சந்திக்க தனக்கு உற்சாகம் அளிப்பதாக இந்த பரிசு தொகை இருந்ததாக கூறினார்.

அடுத்த மாதம் டென்மார்க் மற்றும் பிரான்சில் நடைபெறவுள்ள ஓபன் போட்டிகளில் தனது செயல்திறனை மேம்படுத்த தன்னந்தனியாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

ஹனோய் சீ விளையாட்டு மற்றும் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மலேசியக் குழுவிற்குப் பதக்கங்களை வெற்றிகரமாகப் பங்களித்த பிறகு, RM92,900 சிறப்பு ஊக்கத் தொகையை பெற்ற 28 சிலாங்கூர் விளையாட்டு வீரர்களில் 24 வயதான தீனாவும் ஒருவர்.

சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா இஸ்தானா ஆலம் ஷா வில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,சிலாங்கூர் விளையாட்டாளர்கள் இரண்டு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்  பதக்கத்தை நாட்டுக்கு பெற்று தந்தனர்.  43 நாடுகள்  பங்கெடுத்துக்கொண்ட இப்போட்டி விளையாட்டில்  மலேசியக் குழு பத்தாவது இடத்தைப் பிடித்தது.


Pengarang :